சனி, பிப்ரவரி 27

இது நல்லா இருக்கா.....

எல்லாருக்கும் வணக்கம்
நல்லா இருக்கீங்களா..........


நம்ம வலை பதிவு நண்பர் ஒருவர்
blog -ல ஒரு செய்தி போட்டு இருந்தாரு....
அது என்ன செய்தின்னா,
நான் ஒரு விஜய் ரசிகன், ஆனா
என் friends எல்லாரும் விஜய ஓட்டுற
மாதிரி எனக்கு sms அனுப்புறாங்க,
உங்களுக்கு யார்னா அஜீத்த ஓட்டி
sms அனுப்புனங்கான தயவு செய்ஞ்சு
அத பதிவா போடுங்க, அப்படின்னு
ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார்....
நானும் எங்கெல்லாமோ தேடினேன்,
ஆனா எந்த பிரயோஜனமும் இல்ல....

எனக்கு வந்த sms எல்லாம் விஜய ஓட்டி
தான் வந்துது.......
இதோ சில smaples........


1.கில்லின்னு சொல்லிட்டு கபடி ஆடுவாரு
போக்கிரின்னு சொல்லிட்டு போலீசா வருவாரு
குருவின்னு சொல்லிட்டு கழுகு மாதிரி பறப்பாரு
வில்லுன்னு சொல்லிட்டு gun வச்சு சுடுவாரு
இப்போ வேட்டைகாரன்னு சொல்லிட்டு
ஆடோகாரான வராரு.....
என்ன ஒரு புத்திசாலித்தனம்..........


2.விஜய்யின் அடுத்த படங்கள்:
I.சுறா,
II .போலிஸ்(கவுதம் மேனன்)
III .புயல்(தரணி)
IV .இருள்(செல்வராகவன்)
V No.1 .(கே.எஸ்.ரவிகுமார்)
VI .ஆண்டவன்(ஷங்கர்)
VII .சிறை(அமீர்)
விஜய்யின் மனைவி: என்னங்க
எழுந்துருங்க மணி 7 ஆச்சு.
விஜய்: ஐயோ எல்லாம் வெறும் கனவா....



3. சென்னை பீச்சுல ஒரு சுறா செத்து
போயிடுச்சாம், போலிஸ் விசாரணை
பண்ணதுல விஜயோட அடுத்த
படத்தோட டைட்டில் சுறான்னு
தெரிஞ்சவுடனே சுறா தற்கொலை
பண்ணிகுச்சாம்.....




கடைசியா விஜய் ரசிகர்களுக்கு
ஒரு ஆறுதலான மேட்டர்.....
டீச்சர்: சோழனை பத்தி சொல்லு?
மாணவன்: கரிகாலன் கால போல
கருத்திருக்கு கொழலு?
டீச்சர்: நம்ம தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
புலி உறுமுது....
டீச்சர்: தேசிய மலர் எது?
மாணவன்: ஒரு சின்ன தாமரை என்
கண்ணிலோ பூத்துதே....
டீச்சர் மாணவனை அடிக்க வர்றாங்க...
மாணவன்: நான் அடிச்சா தாங்க
மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட
டீச்சர் மாணவன் மண்டைல குட்டுறாங்க
மாணவன்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....

புதன், ஜனவரி 6

மாணவர்கள் அரியர் வைப்பதற்கு காரணம்:

மாணவர்கள் அரியர் வைப்பதற்கு காரணம்:
1. கிளாஸ் ரூம் வாஸ்து சரியல்ல.....
2. பேனா நல்ல எழுதல.....
3. பக்கத்துல இருந்த பையன் சரியல்ல....
4. எக்ஸாம்க்கு போகும் போது பூனை
குறுக்குல போச்சு.....
5. காலேஜ்ல நம்ம பேர் நெலைச்சு
இருக்குனும்....
6. ஒரு experience -க்காக.....
7. பாடத்த இன்னும் ஆழமா
படிக்கறதுக்கு...
ஹும்ம்..
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...

சனி, டிசம்பர் 12

நான் பேருந்தில் பயணம் செய்தபோது இரு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டது:

மச்சான் எனக்கும் லவ்வுக்கும் செட்டாகவே மாட்டுது...
ஏன்டா மச்சான் அப்படி சொல்ற,
பின்ன என்னடா முதல எங்க அத்த பொண்ண லவ் பண்ணேன்,
அவ என்னடான்னா நான் அவள லவ் பண்றது தெரிஞ்சதும்
கண்டுக்கவே மாட்டுறா, சரின்னு விட்டுட்டேன்....
அத்த பொண்ண போய் லவ் பண்றேன்னு சொல்றியே
வெக்கமா இல்ல. அதான் அவுங்களே கட்டிவைப்பாங்கல்ல
அதுக்குள்ள என்ன அவசரம்.
டே என் கதையை முழுசா கேளு.
சரி சொல்லு..
சரின்னு நம்ம காலேஜ்ல ஒருத்திய பிக் அப் பண்ணேன்..
அவ என்னடான்னா என்கிட்டே இருந்து எவ்வளவு பணத்த
கறக்க முடியுமோ அவ்ளோத்தையும் கறந்துட்டு
கழட்டி விட்டுட்டா..அப்புறம் தான் தெரிஞ்சுது அவ ஏற்கனவே
மூணு பேர கழட்டி விட்டுருகான்னு...
எவ்ளோ டா செலவு பண்ண....
அத விடு மச்சான், போனது போகட்டும்....
அப்படியும் விடாமுயற்சியா, செகண்ட் இயர்ல ஒரு பொண்ண
பாத்தேன், அவ கிட்ட பேசலாம்ன்னு போனா அவ என்ன பாத்து
சொன்ன பாரு ஒரு வார்த்த.....
என்னடா மச்சான் சொன்னா.....
என்ன பாத்து.....
என்ன பாத்து....
என்ன பாத்து....
அட சீ சீக்கிரம் சொல்லுடா மூதேவி....
என்ன பாத்து அண்ணன்னு சொல்லிட்டா மச்சான்....




இதை கேட்டதும் அவன் நண்பன் மட்டுமல்ல,
நானும் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.....

வியாழன், டிசம்பர் 10

தமிழ் நாட்டு பொண்ணுங்க language:

செருப்பு பிஞ்சிடும் - உன்ன எனக்கு பிடிச்சிருக்கு,
எங்க வீட்டுல சொல்லிடுவேன் - உங்க அப்பா அம்மா கிட்ட
permission வாங்கு,
இனிமேல் என் பின்னாடி வராத - நான் உன்ன follow
பண்ண போறேன்,
மூஞ்சபாரு - உன் முகம் எனக்கு பிடிச்சிருக்கு,
பொறம்போக்கு - உன் வீடு எங்க இருக்கு,
பொறுக்கி - என் இதயத்த திருடிட்ட.......

வியாழன், டிசம்பர் 3

jokes of the day

..1..
student: mam உங்களுக்கு காதலுன்னா பிடிக்காதா?
lecturer: ஓ..! பிடிக்குமே...!
student: உங்க பொண்ணு கிட்ட என் காதல சொன்னா,
"எங்க அம்மாவுக்கு காதலுன்னா பிடிக்காதுன்னு சொல்றா",
கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.....!


..2..
அப்பா: ரேங்க் கார்டு எங்கடா?
பையன்: இந்தாங்கப்பா..
அப்பா: அஞ்சு சப்ஜெக்ட்லையும் பெயில்,
இனிமேல் என்னை அப்பான்னு கூப்பிடாத...
பையன்: சரிடா மாப்ள சீன் போடாம
சைன் போடு....


..3..
முதலாமவர்: செல் போன் நல்லா இருக்கே...!
எங்க வாங்குனீங்க?
இரண்டாமவர்: ரன்னிங் ரேஸ்ல ஜெயிச்சு
வாங்கினேன்...
முதலாமவர்: எத்தன பேர் ஒடுனீங்க?
இரண்டாமவர்: நான், போலீஸ், அப்புறம்
இந்த செல் போனோட ஓனர்...!
முதலாமவர்:.......?.........?

திங்கள், நவம்பர் 30

இந்த பொண்ணுங்களே இப்படி தானுங்க

ஏனுங்க இத யாருமே தட்டி கேக்க மாடிங்களா
நாங்க (boys) பாத்தா site அடிக்கிறோம் சொல்றாங்க
அவுங்க (girls) பாத்தா just look ன்னு சொல்றாங்க
நாங்க பேசின jollu னு சொல்றாங்க
அவுங்க பேசின friendly ன்னு சொல்றாங்க
நாங்க கைய புடிச்சா பொறுக்கின்னு சொல்றாங்க
அவுங்க கைய புடிச்சா feeling ன்னு சொல்றாங்க
நாங்க dinner க்கு கூப்பிட்டா datting னு சொல்றாங்க
அவுங்க dinner க்கு கூப்பிட்டா lets chat ன்னு சொல்றாங்க
நாங்க அவுங்க கிட்ட வெட்டி பேச்சு பேசினா
அலையுறோம்னு சொல்றாங்க
அவுங்க எங்க கிட்ட வெட்டி பேச்சு பேசினா
serious discussion ன்னு சொல்றாங்க
நாங்க propose பண்ணா misunderstanding ன்னு சொல்றாங்க
அவுங்க propose பண்ணா true affection ன்னு சொல்றாங்க
என்ன கொடும சார் இது......

பஞ்ச் பாலவின் அசத்தல் பஞ்ச்கள்

எமன் சிரிச்சா eightyla மரணம்
women சிரிச்சா twentyla மரணம்
தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி
பொண்ணு சிரிச்சா வளரும் தாடி
டீ கடையில இருக்கும் மசால் வட
திரும்பி பார்க்கவைக்கும் ரெட்ட ஜட
ஆடிக்கு பின்னல் ஆவணி
தாடிக்கு பின்னல் தாவணி
நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள்ள ஒன்னு
அவங்க பிரிஞ்சா அதற்க்கு காரணம் ஒரு பொண்ணு
பல்லவன் பஸ் கலரு பச்ச
ஒரு பொண்ணு பின்னால போனா
நீ எடுக்கணும் பிச்சை