சனி, டிசம்பர் 12

நான் பேருந்தில் பயணம் செய்தபோது இரு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டது:

மச்சான் எனக்கும் லவ்வுக்கும் செட்டாகவே மாட்டுது...
ஏன்டா மச்சான் அப்படி சொல்ற,
பின்ன என்னடா முதல எங்க அத்த பொண்ண லவ் பண்ணேன்,
அவ என்னடான்னா நான் அவள லவ் பண்றது தெரிஞ்சதும்
கண்டுக்கவே மாட்டுறா, சரின்னு விட்டுட்டேன்....
அத்த பொண்ண போய் லவ் பண்றேன்னு சொல்றியே
வெக்கமா இல்ல. அதான் அவுங்களே கட்டிவைப்பாங்கல்ல
அதுக்குள்ள என்ன அவசரம்.
டே என் கதையை முழுசா கேளு.
சரி சொல்லு..
சரின்னு நம்ம காலேஜ்ல ஒருத்திய பிக் அப் பண்ணேன்..
அவ என்னடான்னா என்கிட்டே இருந்து எவ்வளவு பணத்த
கறக்க முடியுமோ அவ்ளோத்தையும் கறந்துட்டு
கழட்டி விட்டுட்டா..அப்புறம் தான் தெரிஞ்சுது அவ ஏற்கனவே
மூணு பேர கழட்டி விட்டுருகான்னு...
எவ்ளோ டா செலவு பண்ண....
அத விடு மச்சான், போனது போகட்டும்....
அப்படியும் விடாமுயற்சியா, செகண்ட் இயர்ல ஒரு பொண்ண
பாத்தேன், அவ கிட்ட பேசலாம்ன்னு போனா அவ என்ன பாத்து
சொன்ன பாரு ஒரு வார்த்த.....
என்னடா மச்சான் சொன்னா.....
என்ன பாத்து.....
என்ன பாத்து....
என்ன பாத்து....
அட சீ சீக்கிரம் சொல்லுடா மூதேவி....
என்ன பாத்து அண்ணன்னு சொல்லிட்டா மச்சான்....




இதை கேட்டதும் அவன் நண்பன் மட்டுமல்ல,
நானும் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.....

கருத்துகள் இல்லை: